• Jan 19 2025

பூவுக்கு பிறந்த நாளு... எத்தனை வயசு தெரியுமா? ஜோவிகாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது குடும்பத்தில் இருந்தும் சினிமா துறையில் இருந்தும் விலகி இருந்தார்.

அதன் பின்பு பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவருக்கு கிடைத்த வரவேற்பு ஒரு சில பட வாய்ப்புகளும் குவிந்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார் வனிதா.

இதை தொடர்ந்து வனிதாவின் மகள் ஜோவிகா கடந்த வருடம் இடம்பெற்ற பிக் பாஸ் ஏழாவது சீசனில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவருக்கு ஆதரவுகள் இருந்த போதும் அதன் பின்பு அந்த வீட்டில் இடம்பெற்ற பிரச்சனைகளால் ஜோவிகாவுக்கு ஆதரவு குறைந்தது.


இதை அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜோவிகா மாடலிங் செய்வதில் கவனத்தை செலுத்தினார். அதன் பின்பு பார்த்திபனுக்கு அசிஸ்டன்ட்டாக பணி புரிந்தார். அண்மையில் இவரது நடிப்பில் டீன்ஸ் திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில், இன்றைய தினம் ஜோவிகா தனது 19 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். அவருக்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement