• May 09 2024

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமாறு சேத்துமான் திரைப்படத்தின் புதிய வித்தியாசமான போஸ்டர்-

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இயக்குநரை் பா. ரஞ்சித். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இது தவிர நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித்தின் பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது நீலம் புரொடக்‌ஷன் அடுத்து தயாரிக்கும் படமான ‘சேத்துமான்’ என்ற படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இருந்தது . இந்த திரைப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை வசனத்தில், புதுமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

வரும் மே 27 ஆம் தேதி முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக ஸ்ட்ரீம் ஆக உள்ள இப்படத்தின் புதிய வித்தியாசமான போஸ்டரை சோனி லிவ் தளம் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement