• Sep 09 2024

விரதம் இருக்கும் புஸ்ஸி ஆனந்த்... எல்லாமே ரெடி... தொண்டர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் சினிமாவில் இருந்து வெளியேறி அரசியலில் இறங்கி விட்டார். அத்தோடு தற்போது அவரின் அமைப்பில் பல செயற்திட்டங்களையும் செய்து வருகின்றனர். சமீபத்தில் கோட் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.


சினிமாவிற்கு எவ்வளவு முக்கியம் கொடுக்கிறாரோ அதே அளவு அரசியலுக்கும் கொடுக்கிறார்.  எதிர் வரும் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய். சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


45 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது. கொடி அறிமுக விழாவில் பங்கேற்க தொகுதி வாரியாக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கா மஞ்சள் வேட்டி மஞ்சள் சட்டை போட்டு புஸ்ஸி ஆனந்த் விரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement