• Oct 16 2024

ஜோதிகாவின் இடத்தைப் பிடிக்கப் பார்த்த அசின்- முடியவே முடியாது என்று மறுத்த சூர்யா

stella / 11 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான  எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை அசின்

அந்தப் படத்துக்கு பிறகு அசினுக்கு வாய்ப்புகள் மலை போல் குவிந்தன. இதனால் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்.

பெரும்பாலும் ஒரு நடிகருக்குத்தான் தான் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது நடக்கும். ஆனால் நடிகைகளில் அரிதாக அசினுக்கு அது நடந்தது. விஜய்யுடன் நடித்த போக்கிரி, அஜித்துடன் நடித்த ஆழ்வார் ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸாகின. இதற்கிடையே அசினை செம ஃபெர்பார்மராக காட்டிய படம் என்றால் அது கஜினிதான். 


அதில் அவர் ஏற்றிருந்த கல்பனா கதாபாத்திரத்தை இன்றுவரை ரசிகர்கள் மறக்காமல் கொண்டாடி வருகின்றனர். தமிழில் செம பிஸியாக வலம் வந்துகொண்டிருந்த அசின் பாலிவுட் பக்கம் சென்று அங்கு அமீர் கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோருடனும் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு அசின் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிப்பதற்கு அசினிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இயக்குநர் தரப்பு கதையை சொல்லி முடித்ததும் இதில் மொத்தம் இரண்டு ஹீரோயின்கள் என்று சொல்லிவிட்டு உங்களுக்கு ஐஷு (பூமிகா ஏற்றிருந்த கேரக்டர்) கேரக்டர் என்று கூறினார்கள்.


ஆனால் அசினோ எனக்கு பூமிகா கேரக்டர் வேண்டாம் குந்தவை (ஜோதிகா ஏற்றிருந்த கேரக்டர்) கேரக்டர்தான் வேண்டும் என்றார். அதற்கு படக்குழுவோ இல்லை அந்தக் கேரக்டரை ஜோதிகாதான் செய்ய வேண்டும் என்று சூர்யா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் என்றார்கள். அசின் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் குந்தவை கேரக்டர் இருந்தால் நான் செய்கிறேன் இல்லை என்றால் வேண்டாம் என கூறிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement