• Apr 09 2026

'சார்பட்டா பரம்பரை 2' பற்றி ஆர்யா கொடுத்த முக்கிய அப்டேட்.!

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

பா. ரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டன.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. எனினும், சில நிர்வாக மற்றும் தயாரிப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, படப்பிடிப்பு பணிகள் தொடங்காமல் தாமதமாகி வந்தது.

நடிகர் ஆர்யா தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்துவர, ஆர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர்யா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சார்பட்டா பரம்பரை 2 குறித்த முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி, இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆர்யா, மஞ்சு வாரியர் மற்றும் கவுதம் ராம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement