• Jun 14 2026

இயக்குநர் இமயம் பாரதிராஜா சமாதியில் சினேகன் குடும்பம் செய்த செயல்.. ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் தனது மனைவி கன்னிகா மற்றும் இரு மகள்களுடன் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. அவரது இழப்பு திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலையில், பாரதிராஜா மீது கொண்டிருந்த அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் சினேகன் தனது குடும்பத்தினருடன் அவரது சமாதியை தரிசித்தார்.


அப்போது சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய சினேகன், அங்கிருந்த மண்ணை எடுத்து தனது இரு மகள்களின் நெற்றியில் பொட்டாக வைத்தார். தனது குழந்தைகள் பாரதிராஜாவின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் அவரது மனைவி கன்னிகாவும் உடன் இருந்தார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சினேகனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். குருவுக்கு அவர் காட்டிய மரியாதையும், அடுத்த தலைமுறைக்கும் அந்த மதிப்பை எடுத்துச் சென்ற விதமும் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

Advertisement

Advertisement