• Aug 15 2026

நடிகர் ரவிதேஜா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! என்ன தெரியுமா.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ரவி தேஜா, தற்போது பல்வேறு புதிய படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், அவரை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ஹரி சந்தித்துள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இயக்குநர் ஹரி, ரவி தேஜாவை நேரில் சந்தித்து ஒரு ‘ஒன்-லைன்’ கதைக்களத்தை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரியின் படங்கள் என்றாலே அதிரடி, வேகம், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரங்கள் என்பதற்காக ரசிகர்களிடையே தனி வரவேற்பு உள்ளது. அதேபோல் ரவி தேஜாவும் தனது மாஸ் நடிப்பு மற்றும் அதிரடி காட்சிகளுக்காக பிரபலமானவர். 


இந்த நிலையில் ஹரி கூறிய ஆக்ஷன் கதையின் மையக் கருத்து ரவி தேஜாவிற்கு மிகவும் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது ரவி தேஜா ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், இந்த புதிய திட்டம் குறித்து உடனடி அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும் திரைக்கதை முழுமையாக தயார் செய்யப்பட்டு  உறுதி செய்யப்பட்ட பிறகு, படத்தின் தயாரிப்பு நிறுவனம், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை இணைக்கும் இந்த கூட்டணி மிகப்பெரிய ஆக்ஷன் விருந்தாக அமையும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement