• Nov 28 2022

களைகட்டிய 80ஸ் ரீ யூனியன்... அடடே இவங்களும் போய் இருக்காங்களா... வைரலாகும் புகைப்படங்கள்..!

Listen News!
Prema / 2 weeks ago
image
Listen News!

1980 காலப்பகுதியில் திரையுலகில் தடம் பதித்த நடிகர், நடிகைகள் பலரும் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அதாவது '80ஸ் ரீயூனியன்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் 10-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு தெலுங்கின் பிரபல நடிகரான சிரஞ்சீவி, ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் பிரம்மாண்டமாகவும், தடால் புடலாகவும் ஏற்பாடு செய்திருந்தார். 

இந்நிகழ்ச்சியானது திரைப்பிரபலங்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத நினைவாக பதிந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த வருட நிகழ்ச்சிக்காக அவர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் கொரோனா என்ற கொடிய நோய்ப் பெருந்தொற்று பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் '80ஸ் நட்சத்திரங்களின் ரீயூனியன்' நடைபெறாமல் போனது.


இந்நிலையில் மூன்று வருட நீண்ட கால இடைவெளிக்குப் பின் 80ஸ் நட்சத்திரங்களின் சங்கமம் இந்த ஆண்டு மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. அதாவது பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் தென் மாநிலத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரும் கலந்துகொண்டனர். 

மேலும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு நிறத்தைத் தேர்வு செய்து அந்த வண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பெண்களுக்கு வெள்ளி மற்றும் ஆரஞ்சு நிறங்களும், ஆண்களுக்கு சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறங்களும் அறிவிக்கப்பட்டன. 

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் மேற்கண்ட வண்ணங்களில் அரங்கையும் பிரமாண்டமாக தயார் செய்து இருந்தனர். இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிர மற்றும் உள்ளூர் உணவுகளுக்கு மட்டுமே இந்நிகழ்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது. 


மேலும் விடிய விடிய கூத்தும் கும்மாளமுமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 80ஸ் நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது மலரும் நினைவுகளை சந்தோசமான முறையில் பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமின்றி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இந்த வருட 80ஸ் ரீயூனியன் களைகட்டியது என்றே சொல்லலாம்.

அந்தவகையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அதேபோன்று நடிகைகளைப் பொறுத்தவரையில் சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி, மது ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

அதுமட்டுமல்லாது மேற்கண்ட நட்சத்திரங்கள் தவிர நடிகர் மாதவனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்த அனைவரையும் வாழ்த்தியதோடு துபாய் விமானத்தை பிடிக்க வேண்டி இருந்ததால் விரைவில் விடை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக 80ஸ் நட்சத்திரங்களின் ரீ யூனியன் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.