சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனருக்கு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில்
உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது இந்த படத்தின் படப்பிடிப்பு
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாகவும் கூறப்பட்டது. 
இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட்
சுமார் 70 கோடி ரூபாய் என்றும்
ஆனால் இந்த பட்ஜெட்டில் பாதிக்கும்
மேல் சிவகார்த்திகேயன் மற்றும் ஏஆர் முருகதாஸ் ஆகிய
இருவரது சம்பளமே சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. 
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படத்தின் தோல்விக்கு பின்னர் வேறு படங்களில் வாய்ப்பு
கிடைக்காமல் இருந்த ஏஆர் முருகதாஸ், விஜய்
படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் அந்த படத்தில் இருந்து
நீக்கப்பட்ட ஏஆர் முருகதாஸ் சம்பளம்
விஷயத்தில் மட்டும் கறாராக இருப்பதாக கூறப்படுகிறது.
 
குறிப்பாக இந்த படத்தின் நாயகன்
சிவகார்த்திகேயன் சம்பளம் எவ்வளவோ அதைவிட கண்டிப்பாக எனக்கு ஒரு கோடி ரூபாய்
அதிகம் வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் பேசிய பின்னர் தான் இந்த படத்தை
இயக்க ஒப்புக்கொண்டார் என்றும் தயாரிப்பாளரும் ஏஆர் முருகதாஸ் கூறிய
கதை அசத்தலாக இருந்ததால் இந்த படம் நிச்சயம்
வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ஏஆர்
முருகதாஸ் கேட்ட சம்பளத்தை கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
அதுமட்டுமின்றி ஏஆர் முருகதாஸ் அவர்களுக்கு
சல்மான்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து அவருடைய மார்க்கெட் தற்போது மீண்டும் உயர்ந்து வருவதாகவும் எனவே அவரை நம்பி
தாராளமாக 70 கோடி ரூபாய் முதலீடு
செய்யலாம் என்றும் தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
சிவகார்த்திகேயன் உள்பட அனைவருமே ஏஆர் முருகதாஸ் மீது
வைத்த அதீத நம்பிக்கைதான் அவர்
கேட்ட சம்பளத்தை கொடுக்க காரணம் என்றும் நிச்சயம் அவர் தனது திறமையை
நிரூபித்து மீண்டும் தான் ஒரு வெற்றிப்பட
இயக்குனர் என்பதை அனைவருக்கும் தெரிய வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!