• Apr 28 2024

முல்லையைத் தொடர்ந்து கர்ப்பமாகிய மற்றொரு பிரபலம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடக்கவிருக்கும் டுவிஸ்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பன ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் முல்லைக்கு குழந்தை பிறக்காது என டாக்டர் தெரிவித்திருந்த நிலையில் முல்லை கர்ப்பமாகியுள்ளார்.இதனை வீட்டிலுள்ள அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.


அத்தோடு அவர்கள் நடத்திய சாப்பாட்டுக்கடையில் ஏற்பட்ட பிரச்சினையையும் தனம் கண்டு பிடித்து தீர்த்து விட்டார். இதனை அடுத்து இனி என்ன நடக்கப் போகின்றது என ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.


அதன்படி தற்பொழுது கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவும் கர்ப்பமாகி விட்டதாக கூறப்படுகின்றது.இதனால் அடுத்து என்ன என்ன திருப்பங்கள் நடக்கப் போகின்றது என்பதனைக் காண ரசிகர்கள் ஆவலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement