• May 19 2024

'ஜெயிலர்' படம் பார்க்க தியேட்டருக்குப் போன தனுஷ்... சூப்பரான சம்பவம் பண்ணிய அனிருத்... வைரலாகும் வீடியோ...!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, ஜீவிதா உள்ளிட்ட பலர் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் உருவாகியுள்ளது. 


அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜெயிலர் படம் இன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கின்றது.


'ஜெயிலர்' படத்தைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் மட்டுமன்றி பல பிரபலங்களும் தியேட்டருக்குப் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில் நடிகர் தனுஷ் D50 படப்பிடிப்பை விட்டுவிட்டு மாமனார் படம் தான் முக்கியம் என்பதற்காகவும், ரஜினியின் தீவிர ரசிகன் என்பதனாலும் படம் பார்ப்பதற்காக ரோஹிணி தியேட்டருக்கு சென்றுள்ளார்.


அதேபோன்று அனிருத் ஜெயிலர் படம் பார்ப்பதற்காக  வெற்றி தியேட்டருக்கு சென்றுள்ள அனிருத் அங்கு ரசிகர்கள் முன்பு பாட அதனை அவர்களும் கொண்டாடியுள்ளனர். இவ்வாறாக இவர்கள் இருவரும் படம் பார்க்க சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement