• May 12 2024

ஹீரோவாக புதிய அவதாரம் எடுக்கும் தொகுப்பாளர் ரக்ஷன்- அதுவும் யாருடைய படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் முக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வருபவர் தான் ரக்ஷன். கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் இவர் தொகுப்பாளராகக் களமிறங்கினார்.

இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் இவர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமே தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்துக் கொண்டார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கி வரும் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார். இந்த நிலையில் இவரைப்பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ரக்ஷன் விரைவில் ஹீரோவாக இருக்கிறார். யோகேந்திரன் இயக்கத்தில் ரக்‌ஷன் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் விஷாகா திமன் என்பவர் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

மேலும் தீனாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் தொடக்க பூஜை நேற்று நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement