• Apr 28 2024

அமீன் தர்காவில் ஏ.ஆர். ரஹ்மான் உடன் வழிபாடு செய்த ரஜினிகாந்த்- திடீர் விசிட்டுக்கு என்ன காரணம்?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.மேலும் ரஜினிகாந்த் கடந்த 12ம் திகதி தனது 72வது பிறந்த நாளைக் கொண்டாடியிருந்தார்.

இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.அதனை தொடர்ந்து தற்போது பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார் .அதன்படி நேற்று இரவு திருப்பதி சென்ற நிலையில், இன்று காலை அங்கே தரிசனம் செய்தார். 


பின்னர் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் உடன் இணைந்து கடப்பாவில் 400 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற அமீன் தர்காவில் வழிபாடு நடத்தி உள்ளார்.ரஜினிகாந்த் உடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து தர்காவில் வழிபாடு நடத்தி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடன் அமீன் தர்காவில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு நடத்தி உள்ளார். அங்கே ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறப்பு மரியாதைகளும் மாலைகளும் அணிவிக்கப்பட்டன. மதங்களை கடந்து மனிதங்களை நேசிக்கும் மனிதராக ரஜினிகாந்த் உள்ளார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement