• Jan 08 2026

அமோக வெற்றியில் அமரன்..! வெளியானது OTT ரிலீஸ் அறிவிப்பு...!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படம் துவங்கியதில் இருந்தே படத்திற்கு பாசிட்டிவான டாக் இருந்து வந்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை இப்படம் உருவாகிய இந்த படத்தில் நடிகராக சிவகார்த்திகேயன்,சாய் பல்லவி நடித்திருந்தனர்.  


ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி இப்படம் சிறப்பாக அமைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். 100 கோடிக்கு மேல் அமோகமாக வசூலித்து வருகிறது.  படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர். அதன் காரணமாக மிகப்பெரிய வெற்றியை இப்படம் பெற்றுள்ளது. 


இப்படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து இதன் OTT ரிலீஸை நெட் பிலிக்ஸ் நிறுவனம் தள்ளிவைத்தது அந்தளவிற்கு இப்படத்தின் வெற்றி அமைந்தது. இந்நிலையில் தற்போது அமரன் திரைப்படம் OTT ரிலீஸ் நவம்பர் 29 ஆம் தேதி நெட் பிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிடும்.

Advertisement

Advertisement