• Sep 20 2024

கூலர்ஸ், சிகரெட், காதில் கடுக்கன் என வித்தியாசமான கெட்டப்பில் அல்லு அர்ஜுன் -ஆச்சரியத்தில் ராஷ்மிகா மந்தனா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் இறுதியாக புஷ்பா என்னும் திரைப்படம் வெளியாகியது. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகியிருந்தார் ராஷ்மிகா மந்தனா.

இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூல்மழையும் பொழிந்தது. இப்படத்தில் புஷ்பான்னா ப்ளவர்னு நினைச்சியா, பயருடான்னு இவர் பேசிய வசனங்கள் ரசிகர்களை வேற லெவலில் கவர்ந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாக உள்ள நிலையில், வரும் ஆகஸ்டில் படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது விளம்பரப் படம் ஒன்றிற்காக தன்னுடைய கெட்டப்பை வெகு சிறப்பாக மாற்றிக் கொண்டுள்ளார். கூலர்ஸ், சிகரெட், காதில் கடுக்கன் சகிதம் மிகவும் கரடுமுரடான இந்தத் தோற்றம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள அல்லு அர்ஜுனின் இந்தக் கெட்டப் திரையுலகினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்திருந்த ராஷ்மிகாவும் இந்தப் புகைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

.

Advertisement

Advertisement