• May 19 2024

இதெல்லாம் டேஞ்சர் அதனால தவிர்த்திடுங்க- பிரதீப்பை மிரட்டிய விஜய் வர்மா- பிக்பாஸில் எல்லை மீறும் சண்டைகள்

stella / 7 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பி்த நாளிலிருந்து பல  பஞ்சாயத்து நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதன்படி நேற்றைய தினமும் ஒன்று நடந்துள்ளது.

அதாவது இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து மூன்று பேரும், ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து மூன்று பேரும் வீட்டு பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் இரண்டு வீடுகளிலும் எந்த விஷயங்களை எல்லாம் இம்ப்ரூவ் செய்துகொள்ள வேண்டும் என சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் விஜய் வர்மா, மணிசந்திரா, கூல் சுரேஷும்; ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து யுகேந்திரன், அனன்யா, நிக்ஸனும் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


அதன்படி பேசிய விஜய் வர்மா எடுத்ததுமே பிரதீப் பக்கம் தனது டார்கெட்டை திருப்பினார். பிரதீப் ஒருமுறை என்னை ஷூவால் தட்டிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் ஒரு சாரி கூட கேட்கவில்லை. அதேபோல் மாயா ஒருமுறை நின்றுகொண்டிருந்தார் அவரையும் தள்ளிவிட்டு சென்றுவிட்டார். பிரதீப் நீங்க அட்லீஸ்ட் ஒரு சாரி சொல்லிருக்கலாம்.


 நான் சூடுக்காரன் எனக்கு கோபம் வந்து திடீர்னு கையை வெச்சு இடிச்சிட்டேனு வெச்சுக்கோங்க உங்க மூக்கோ, வாயோ உடையலாம். உடனே உங்களை ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகும் நிலைமை வரலாம். அதேபோல் சாவடிச்சிடுவேன்னு சொல்றீங்க, 24 அடிலேர்ந்து கீழ விழணும்னு சொல்றீங்க, கத்தியை வெச்சு குத்திடுவேனு சொல்றீங்க. உங்களிடம் ஒன்னு சொல்றேன். என் மேல பாசமான பசங்க வெளில இருக்காங்க. நீங்க வெளில போன பிறகு இங்க வா என்ன ரொம்ப பேசுற எங்க குத்து பார்ப்போம்னு சொல்வாங்க அதெல்லாம் டேஞ்சர். சோ தவிர்த்துடுங்க என சொன்னார்.


Advertisement

Advertisement