• Jun 17 2026

தமிழ் சினிமாவின் பழைய காதல் படங்கள் எல்லாம் வேஸ்ட்டா?– மடோனா பேச்சால் வெடித்த சர்ச்சை!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகை மடோனா செபாஸ்டியன் சமீபத்தில் 'ஹார்டின்' திரைப்படத்தின் நிகழ்வில் பேசிய கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்த உணர்வுபூர்வமான கருத்துகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.


அந்த நிகழ்வில் பேசிய மடோனா செபாஸ்டியன், “ஹார்டின்" படத்தின் கதையை இயக்குநர் சொல்லும்போதே நான் அந்தக் கதையுடன் ஒன்றிவிட்டேன். பல ஆண்டுகளாக நாம் ஏராளமான காதல் கதைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த படம் உணர்வுகளின் புத்துணர்ச்சியை தூண்டும் விதமாகவும், மனதைத் தொடும் தருணங்களின் அழகான கலவையாகவும் அமைந்துள்ளது. உங்கள் அன்புக்குரியவர்களுடன் திறந்த மனதுடன் இந்தப் படத்தைப் பாருங்கள். உண்மையிலேயே இந்த படம் அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹார்டின்' திரைப்படம் ஒரு அழுத்தமான காதல் மற்றும் உணர்ச்சி பயணத்தை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சனந்த் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், மடோனா செபாஸ்டியன் மற்றும் இமையா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள், டிரெய்லர் மற்றும் விளம்பரப் பொருட்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது மடோனா செபாஸ்டியனின் இந்தப் பேச்சு படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. 'ஹார்டின்' திரைப்படம் வருகிற ஜூன் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement