தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனி இடத்தை உருவாக்கியவர் SJ.சூர்யா. ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் தனது தனித்துவமான பங்களிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவர் இயக்கிய முதல் படமான ‘வாலி’ (Vaali) தான் அவரை சினிமா உலகில் சிறந்த director ஆக மாற்றியது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் அஜித் குமார் தான். அதனை SJ.சூர்யா இன்று வரை மறக்கவில்லை.
தற்போது, ‘குட் பேட் அக்லி’ (Good Bad Ugly) படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனினும், SJ.சூர்யா இன்றுவரை வாலி படத்தில் அஜித் தனக்கு கொடுத்த வாய்ப்பினை மறக்காது உள்ளார்.

1999ம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம் அஜித்-சிம்ரன் காம்பினேஷனில் உருவாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்தது மட்டுமின்றி, சைக்கோ தம்பி வேடம் மக்களைக் கவரும் விதத்தில் காணப்பட்டது.
அந்த வெற்றி தான் SJ.சூர்யாவை தமிழ்த்திரை உலகில் ஸ்டார் இயக்குநராக உயர்த்தியது. புதிய பட வெளியீடுகள், விருதுகள் பெற்ற போதிலும், தனக்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பினை மறக்காமல் SJ.சூர்யா சமீபத்திய நேர்காணலிலும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!