தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.இப் படத்தில் சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதுடன் இந்த படத்திற்கு தற்காலிகமாக ஜேசன் சஞ்சய் 01 என்று பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைக்கிறார்.
இப் படத்தின் படப்பிடிப்பை ஜனவரி 2025 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது லைகா நிறுவனம் மிகவும் நெருக்கடியில் இருப்பதால் ஜேசன் படத்தினை ஒத்தி வைத்துள்ளதால் அவர் மிகவும் டென்ஷனாகி இந்த கம்பனியை விட்டு விலக தீர்மானித்துள்ளார்.
இதன் காரணமாக தல அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிற்கு அழைப்பு விடுத்துள்ள சஞ்சையிடம் நடிகர் அஜித் "நீ எப்ப இந்த நிறுவனம் வேண்டாம் என நினைக்கிறியோ தயங்காமல் சொல்லு நான் உனக்கு நல்ல கம்பெனியை சொல்லுறேன்" என கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் ஒரு பேச்சு வார்த்தையில் சஞ்சய் லைகா நிறுவனத்துடன் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!