• Mar 29 2025

இணையத்தை ஆக்கிரமித்த அஜித்! டுவிட்டரில் தெறிக்கும் வெற்றி! வாழ்த்தும் பிரபலங்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தல அஜித் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸில் வெற்றி பெற்றதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் டுவிட்டரில் எந்த பக்கம் பார்த்தாலும் அஜித்தின் வெற்றி வீடியோக்கள் தான் ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் பிரபலனகள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


 சினிமா பிரபலங்கள் அனைவருக்குமே சினிமாவை தாண்டி மற்ற விஷயங்கள் மேல் ஒரு பேஷன் இருக்கும். அப்படி அஜித்திற்கு கார் ரேஷ் மிகவும் பிடிக்கும் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். தற்போது அஜித் துபாயில் நடைபெறும் 24 Hours ரேஸில் தனது குழுவினருடன் இந்தியா சார்பில் கலந்துகொண்டு 3ம் இடத்தினை பெற்றுள்ளார். 


அஜித் மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக நிகழ்வை முடித்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். இந்திய கொடியை தனது கையில் ஏந்தி அஜித் ரசிகர்கள் அனைவரையும் சந்தித்தார். அவரது வெற்றியைக் கொண்டாட ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் திரண்டுவந்தனர். இந்நிலையில் இவரின் வெற்றிக்கு நடிகர் மாதவன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ஆர்வ் ,அர்ஜுன் தாஸ் என பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement