• Feb 22 2025

சவுந்தர்யா மீது வன்மத்தில் இருக்கும் தல ரசிகர்கள்..! நடிகை சனம் ஷெட்டி பதிவு..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 8 முடிவுக்கு வரவுள்ள நிலையில் கடந்த தினங்களில் பிக்போஸ் "ஆடிய ஆட்டம் என்ன?" எனும் நிகழ்ச்சியினை நடாத்தி இருந்தது இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருத்தரும் தமிழ் சினிமா நடிகர்களை போன்று நடனம் ஆடி இருப்பார்கள்.


இதன் போது கில்லி திரிஷா ஆக இருந்த சவுந்தர்யா மங்காத்தா அஜித் கதாபாத்திரத்தில் இருக்கும் சிவகுமாரை பார்த்து அஜித்தை ட்ரோல் செய்வது போன்று கதைத்திருந்தார்.அதாவது "இத்தனை வயசாகியும் இப்பவும் நடிச்சிட்டு இருக்கீங்களே சார்; பைக் எடுத்துட்டு எங்கயோ போனீங்களே சார் ரிட்டன் வந்திட்டிங்களா " என கலாய்த்திருந்தார்.


இதனால் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இவ் வீடியோவினை பார்த்த அஜித் ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்களும் பொங்கி எழுந்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் பிக்பாஸ் பிரபலம் சனம்ஷெட்டி அவர்களும் சவுந்தர்யா மீது ஆதங்கத்துடன் பேசி ஒரு வீடியோவினை தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.


குறித்த வீடியோவில் "ஒருத்தங்களோட வயசு வச்சு age shaming பண்ணுறது ரொம்ப தப்பு இதுவே நாங்க சவுந்தர்யாக்கு 30 வயசு ஆகுது இன்னமும் சின்ன பிள்ளை மாதிரி பண்ணிட்டு இருக்காங்க என்டு சொன்னா ஒத்துப்பாங்களா " என சரமாரியாக பேசியுள்ளார்.

வீடியோ இதோ ...

Advertisement

Advertisement