• May 19 2024

இதுவரை பார்த்திடாத நியூ மாஸ் லுக்கில் அஜித் ...இணையத்தில் பட்டைய கிளப்பும் வைரல் புகைப்படங்கள்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

கோலிவுட்டின் அல்டிமேட் ஸ்டார் எனவும் ஆசை நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ள விடாமுயற்சி, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

அதேபோல், விடாமுயற்சி டைட்டில் டீசர் வெளியான பின்னர் இதுவரை வேறு எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அஜித்தின் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது. துணிவு படத்தில் அஜித்தின் கெட்டப்பை எடிட் செய்துள்ள ரசிகர் ஒருவர், அதனை அப்படியே மில்கி கலரில் டிசைன் செய்துள்ளார். வெள்ளை நிற காஸ்ட்யூம், கோல்டன் அசசரிஸ் என படு மிரட்டலாக உருவாகியுள்ளது. இதுவரை அஜித்தை இப்படி ஒரு லுக்கில் யாருமே பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேநேரம் இந்த போஸ்டரை கலாய்த்தும் சிலர் கமெண்ட்ஸ் போட்டுள்ளனர். அதாவது "உண்மயாவே இது அஜித் தானா, பார்க்க சீயான் விக்ரம் மாதிரியே இருக்கு" என ட்ரோல் செய்துள்ளனர். மேலும் விடாமுயற்சி அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர் தான் இப்படி அஜித்தை வைத்து சம்பவம் செய்துள்ளார் எனவும் ஜாலியாக கலாய்த்துள்ளனர்.


 

Advertisement

Advertisement