• Apr 28 2024

மனைவியுடன் செம ஹாட் ரொமான்டிக் போஸ் கொடுத்த அஜித்- சூப்பரான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்.  தற்போது அஜித்தின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் விஷயம் ஏகே 62 படம் குறித்த அப்டேட் தான். இப்படம்  குறித்த எந்த தகவலும் வெளியாகாததால் ரசிகர்கள் அடிக்கடி அப்டேட்டும் கேட்டு வருகின்றனர்.இப்படத்தை பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளது உறுதியாகி உள்ளது

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை இப்படத்தை தயாரிக்க உள்ள, லைகா நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.


ஏ கே 62 படம் குறித்த தகவல் தாமதம் ஆகி வருவது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றம் என்றாலும், அவ்வப்போது அஜித்தின் மனைவி ஷாலினி யாரும் எதிர்பாராத விதமாக, சில அல்டிமேட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய மகன் ஆத்விக்குடன், கணவர் அஜித் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி... இதை தொடர்ந்து, அஜித்துடன் போட்டில் எடுத்துக்கொண்ட செம ஹாட் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதில் வெள்ளை நிற மேக்சி கவுன் அணிந்து ஷாலினி ஹாலிவுட் ஹீரோயின் போல் ஜொலிக்கிறார். அஜித் பச்சை நிற டீ-ஷர்ட் அணிந்து, கருப்பு நிற கூலிங் கிளாஸ் உடன் மிகவும் ஸ்டைலிஷாக, அமர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement