• Jul 01 2026

ரிலீஸ் தேதியை அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷின் ஓ சுகுமாரி.! சர்ப்ரைஸ் அப்டேட்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிகரமாக நடித்து வரும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். வித்தியாசமான கதைகளையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்வதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள ‘ஓ சுகுமாரி’ திரைப்படம் வரும் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

பரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரித்துள்ளார். படத்தில் இளம் நடிகர் திருவீர் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு, ஆமணி, முரளிதர், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

கிராமத்து வாழ்க்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் ‘தாமினி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.


படத்திற்கு சி.ஹெச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான படத்தின் டீசரும் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வைரலானது.

இதற்கு முன்பாக, காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, வடசென்னை, டிரைவர் ஜமுனா, பர்ஹானா, தீராக் காதல் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

மேலும், ஓ சுகுமாரி திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதால், தென்னிந்திய ரசிகர்களுடன் வடஇந்திய ரசிகர்களையும் கவரும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிராமத்து பின்னணி, குடும்ப உணர்வுகள், காதல் மற்றும் வலுவான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘ஓ சுகுமாரி’, ஜூலை 17ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு திரைப்பட வட்டாரத்தில் நிலவி வருகிறது.

Advertisement

Advertisement