• Aug 18 2026

ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுக்கப் போகிறாரா மனோஜ்.? சத்யா திருமணத்தில் ஒன்று கூடிய குடும்பம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜுக்கு முத்துவும் மீனாவும் பணம் கொடுத்து உதவ வேண்டும் என விஜயா பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனால், முத்து, "அவன் வாங்கிய கடனுக்காகத்தான் நான் இன்னும் டியூ கட்டிக்கொண்டிருக்கிறேன். அவனுடைய பிரச்சனையை அவன்தான் சரி செய்ய வேண்டும்" என கூறுகிறார்.

அந்த நேரத்தில் அங்கு வரும் மனோஜ், "எனக்கு யாரும் பணம் தர வேண்டாம். என்னுடைய நண்பர்களிடம் கேட்டுள்ளேன். அவர்கள் பணம் தருவதாக கூறியுள்ளார்கள்" என சொல்கிறார். ஆனால், இதை நம்ப விஜயா மறுக்கிறார். மேலும், முத்து, "நான் வாங்கிய கடனுக்கு நான்தான் பொறுப்பு" என மனோஜிடம் சத்தியம் செய்கிறார்.

அதன் பின்னர், அறைக்குள் சென்ற மனோஜிடம் விஜயா, "உண்மையைச் சொல்லு... எப்படி இந்தப் பணம் கிடைக்கும்?" என கேட்கிறார். அதற்கு, "அது நிச்சயம் கிடைக்கும்" எனக் கூறும் மனோஜ், மேலும் கனகாவிடம் பணம் வாங்கி ரோகிணியை விவாகரத்து செய்ய திட்டமிடுகிறார்.

மற்றொரு பக்கம், ஆங்கில வகுப்பில் ஸ்வேதாவுக்கு ஒருவர் காதலை வெளிப்படுத்துகிறார். இதனால், அவர் கோபத்தில் அங்கிருந்து வெளியேறுகிறார்.

இறுதியாக, பாட்டி வீட்டில் நடைபெறும் சத்யாவின் திருமணத்திற்கு விஜயா, அண்ணாமலை மற்றும் மொத்த குடும்பத்தினரும் வருகை தருகின்றனர். இதனால் பாட்டி வீடு கலகலப்பாக காணப்படுகிறது. இதுவே இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement