• Sep 10 2025

பெயர்,படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்!உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யாராய் வழக்கு பதிவு!

Roshika / 10 hours ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய் தனது பெயர் மற்றும் புகைப்படங்களை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


அதில், டி-ஷர்ட், பாத்திரங்கள், ஜார்கள் உள்ளிட்ட பொருட்களில் தனது புகைப்படம் பயன்படுத்தப்படுவதாகவும், இது தனிப்பட்ட உரிமைகள் மீறலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். தனக்கான அனுமதி இல்லாமல், வர்த்தக இலாபத்திற்காக புகைப்படங்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும், இது அவரது தனிநபர் உரிமைக்கு எதிரானதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி, "நாடுமுழுவதும் இந்த புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்று தீர்மானித்துள்ளார். இது போன்ற தவறான பயன்பாடுகள் மீதான எச்சரிக்கையாகவும், பிரபலங்களின் தனிமனித உரிமைகளை பாதுகாக்கும் வழிமுறையாகவும் இது பார்க்கப்படுகிறது.


இந்த வழக்கின் மூலம், பிரபலங்கள் தங்களது பிரசித்தி, பெயர் மற்றும் உருவத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை உறுதி செய்யும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement