• Sep 30 2023

நிச்சயதார்த்தத்தில் கௌதமிற்குக் காத்திருந்த அதிர்ச்சி... உண்மையை உடைக்கும் ஐஸ்வர்யா... இனி நிகழப்போவது என்ன..?

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இன்றைய ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கிறது.


அதில் ரொம்ப கோலாகலமாக கௌதம் மற்றும் வெண்ணிலா நிச்சயதார்த்தம் நடந்திட்டு இருக்கின்றது. கௌதம் சந்தோஷத்தோட வெண்ணிலா கையைப் பிடித்து மோதிரம் போடப்போகும் போது , ஐஸ்வர்யாவை கூட்டிக் கொண்டு பிரபா மற்றும் மகா மண்டபத்திற்குள் வருகிறார்கள். ஐஸ்வர்யா அழுதவாறே வருகின்றார். 


இவர்களை கண்ட அதிர்ச்சியில் கௌதம் நிற்க '' என்ன நடந்துச்சின்னு உண்மைய  சொல்லு அக்கா'' என்று  மகா சொல்ல ஐஸ்வர்யா எல்லார் முன்னிலையில்  உண்மைய சொல்லிருவாங்களா என்ற பயத்தோடு கௌதம் இருக்கிறார்.


இப்படி பரபரப்பான எதிர்பார்க்காத திருப்பங்களோடு இந்த வீடியோ வெளிவந்துள்ளது. இனி நிகழப்போவது என்ன என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement