• Apr 28 2024

பிரபல நடிகரின் படத்தை தியேட்டரில் பார்த்த விஜய்- எழுந்து நின்று செய்த அலப்பறையைப் பாருங்க- வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ

stella / 7 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஏராமான ரசிகர்களைக் கொண்டு காணப்படும நடிகர் தான் விஜய். இறுதியாக வெளியாகிய வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் 125 நாட்கள் நடைபெற்றது. இதனை அடுத்து இப்படத்தின் போஸ்ட் ப்ரடெக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ள நிலையில் விஜய் தன்னுடைய 68வது படத்தை வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவிததுள்ளார். இது குறித் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அண்மையில் வெளியாகியிருந்தது. அதன்படி விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 


தளபதி 68 பூஜை செப்டம்பரில் நடைபெறும் எனவும், அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தின் முதற்கட்ட வேலைகள், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கியதால் விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

மேக்கப், பாடி ஸ்கேனிங் போன்ற ஹை-டெக் ரிசர்ச்களுக்கு பிரபலமான இந்த இன்ஸ்டிடியூட்டில், விஜய்க்கும் ஸ்கேனிங் செய்யப்பட்டு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளதாம். இந்த போட்டோஸ் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தற்பொழுது ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.


அதாவது பொதுஇடங்களிலும் படப்பிடிப்பிலும் ரொம்பவே அமைதியாக இருக்கும் விஜய், ஹாலிவுட் படமான Equalizer 3 FDFS பார்த்து ரசித்துள்ளார். அதுவும் ரியல் ஃபேன் பாய் மோடுக்கு மாறியுள்ள அவர், படம் ஓடிக்கொண்டிருக்கும் போது எழுந்துநின்று அப்ளாஸ் செய்துள்ளார். இதனை போட்டோ எடுத்துள்ள வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். விஜய்யின் இந்த போட்டோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement