முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா சந்த் சா ரோஷன் செகரா என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து 2006-இல் வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்றி கொடுத்தார் நடிகை தமன்னா
தொடர்ந்து முன்னணி நடிகர்களான தல, தளபதி, தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.அத்துடன் நடிகை தமன்னா வெப் சீரிஸ் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
இவர் தற்போது “பாப்லி பவுன்சர்” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதுர் பண்டார்கரின் என்பவர் இயக்க ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஜங்கிலீ பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
மேலும் இதில் லேடி பவுன்சராக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படம் வட இந்தியாவின் உண்மையான ‘பவுன்சர் நகரமான அசோலா ஃபதேபூரில்’ அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது.
அதில் இப்படம் இந்த ஆண்டு நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரின் வரும் செப்டம்பர் 23-ம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இப்போ ஸ்டாரில் லேடி பவுன்சராக இருக்கும் தமன்னாவின் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
பிற செய்திகள்
- காமெடி நடிகர் யோகி பாபுவின் வீட்டை பார்த்துள்ளீர்களா? வைரலாகி வரும் புகைப்படங்கள்..!
- திடீர் என கெட்டப்பை மாற்றிய செல்வராகவன்- தம்பி தனுஷையை ஓவர்டேக் செய்துவிட்டாரே..!
- அதிவேகமாக காரை ஒட்டிசென்ற நடிகர் பிரபாஸ்-வைரலாகும் வீடியோ..!
- டுவிஸ்ட் வைத்த லோகேஷ்; சமந்தா வில்லி ஆனதால் விஜய்க்கு ஜோடி இவர் தானாம்..!
- தற்கொலை முயற்சி செய்தேனா.. முதன் முறையாக சீரியல் நடிகர் கொடுத்த விளக்கம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!