கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் தேர்தல் பணியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்காக ஜனவரி முதல் மார்ச் வரை மொத்தமாக கால்ஷீட் கொடுத்த ஜெயம் ரவி, அந்த கால்ஷீட்டை படக்குழுவினர் பயன்படுத்தாததால் அதிருப்தி அடைந்த நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் துல்கர் சல்மான் தற்போது தமிழ் தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிஸியாக இருக்கும் நிலையில் மொத்தமாக தன்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது என்று கூறி ஏற்கனவே இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே நிலைமை த்ரிஷாவுக்கு இருந்தாலும் அவரது காட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டு விட்டதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகவில்லை என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவருக்கான மாற்று நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் கடந்த சில நாட்களாக இருந்த மணிரத்னம் அவர்கள் தற்போது துல்கர் சல்மான் கேரக்டரில் சிம்புவை நடிக்க முடிவு செய்துள்ளார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த கேரக்டரில் நடிக்க அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி இன்னொரு கேரக்டரில் அருண் விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'செக்கச்சிவந்த வானம்' என்ற திரைப்படத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய் மற்றும் சிம்பு நடித்த நிலையில் மீண்டும் மூவரும் ஒரே படத்தில் இணைவதை பார்க்கும் போது நெட்டிசன்கள் மீண்டும் ஒரு செக்க சிவந்த வானமா? என கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!