• Apr 17 2026

மாலையை வைத்து முட்டி மோதிய சம்பந்திகள்.. ஆரம்பமே ரணகளம்! செக் வைத்த ரோகிணி! ஸ்ருதி எடுத்த முடிவு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

அதில், ஸ்ருதியின் அம்மாவும், அப்பாவும் ரவுடி ஒருவரை வரச் சொல்லி அவரை முத்துகிட்ட வம்பு பண்ண சொல்லி, அதனால் உருவாகும் பிரச்சனையின் மூலம் தமது பொண்ணை  வீட்டோட வைக்கிறதுக்கு பிளான் பண்ணுகிறார்கள்.

மறுபக்கம் ரோகினியும், வித்யாவும் ஏற்பாடு செய்த ஆளை வர வைத்து, அவர் மூலம் முத்துவை குடிக்க வைத்து அதனால் பிரச்சனை உருவாகி , இந்த பங்க்ஷன் நிறுத்தப்பட்டால் தான் எங்க அப்பா இதனால தான் வரல என  சொல்லலாம் என்று அவர்களும் மறுபக்கம் பிளான் போடுகிறார்கள்.

அதன் பின் முத்து எதுவும் பேசாமல் மௌன விரதமாக இருக்க, மீனா அவரை கிள்ளி பார்க்கிறார். அப்போது முத்து வாய் திறக்காமல் இருக்கிறார். இதை அடுத்து ஸ்ருதி நகைகளை போட்டு ரெடியாக, இவ்வளவு நகை வேண்டாம் என்று அவர் சொன்ன போதிலும் அவரது பிரெண்ட்ஸ் உன்னோட சேர்ந்து ரோகினிக்கும் தாலி பிரிச்சு போடுறாங்க. இரண்டு பேருல யார் அதிகமான நகை போட்டு இருக்காங்கன்னு பார்ப்பாங்க என்று சொல்கிறார்கள்.


அதன்பின் ஸ்ருதியின் அம்மா தாலி பிரித்து போடும்போது எங்கட  வழக்கப்படி துளசிமாலை தான் போட வேண்டும் என மாலையுடன் ஸ்ருதி ரூமுக்கு செல்ல, விஜயாவும் எங்கட வழக்கப்படி ரோஜாப்பூ மாலை தான் போட வேண்டும் என்று அவரும் மாலையுடன் செல்கிறார். ரூமுக்குள் இருவருக்கும் இதனால் வாக்குவாதம் ஆகிறது. இதையெல்லாம் பார்த்த முத்து கண்டிப்பா ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு தான் வெளியே வருவாங்க என்று மீனாவிடம் சொல்கிறார்.

எங்கட வழக்கத்தை விட்டுக் கொடுக்க முடியாது என இருவரும் விடாப்பிடியாக இருக்க, ஸ்ருதி முதலில் தன்னுடைய அம்மாவின் கையில் இருக்கும் மாலையை வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டு, விஜயா கையில் இருக்கும் மாலையையும் வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.




Advertisement

Advertisement