• Jul 27 2024

கமல்ஹாசனுடன் நடிக்க மறுத்தாரா ஐஸ்வர்யா ராய்? புரியாத மர்மம்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் ஜோடியாக இரண்டு படங்களில் நடிக்க ஐஸ்வர்யா ராய் இடம்  இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடந்த்திய நிலையில் அவர் நடிக்க முடியாது என்று கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன்’ என்ற திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா நடித்திருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

 இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் முதலில் இந்த படத்தில் மனிஷா கொய்ராலா கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் இயக்குனர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அவர் ஒரு சில காரணங்களை கூறி கமல்ஹாசனுடன்  ’இந்தியன்’  படத்தில் நடிக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது..



இந்த நிலையில் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தொடங்கிய ’தக்லைஃப்’ படத்திலும் மணிரத்னம் முதலில் த்ரிஷா கேரக்டருக்கு ஐஸ்வர்யாராயை தான் அணுகியதாகவும் ஆனால் அவர் மீண்டும் கமல்ஹாசனுடன் நடிக்க முடியாது என்று கூறி விட்டதாகவும் தெரிகிறது.

இரண்டு முறை கமல்ஹாசனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கால்ஷீட் தேதி இல்லாததால் தான் ஐஸ்வர்யாராய் நடிக்க முடியாது என்று கூறினாலும் அவர் ஏன் கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.  

Advertisement

Advertisement