• Apr 17 2026

ஜெயலலிதா தோழியை காதலித்தாரா இசைஞானி? பயோபிக்கில் இதெல்லாம் வருமா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் இளையராஜாவின் கேரக்டரில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை அருண்  மாதேஸ்வரன் இயக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் கமல்ஹாசன் திரைக்கதை எழுதும் பணியையும் தொடங்கி விட்டதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா கடந்த 70 கால கட்டத்தில் ஒரு இசை கலைஞரை காதலித்ததாகவும் அந்த காதலை அவரிடமே அவர் கூறிய நிலையில் அந்த காதலை அவர் மறுத்துவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து விட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் அந்த இசை கலைஞர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்றும் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. பொதுவாக வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்றால் ஒளிவு மறைவின்றி எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படும் நிலையில் இளையராஜாவின் முதல் காதல் இந்த படத்தில் இடம் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement