• Jan 18 2025

சொத்துக்களை சேர்த்து வைத்த விஜயகாந்த்! கோடிக்கணக்கில் இருக்கும் விஜயகாந் மகனின் சொத்துமதிப்பு!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

கேப்டன் விஜயகாந்த் இன்று தமிழ் சினிமாவும் சரி, தமிழக அரசியலிலும் இல்லையே என ஏங்குபவர்கள் அதிகம். சினிமாவில் தனது நாட்டுப்பற்றை வெளிக்காட்டி வந்தார். சிறந்த தலைவனுக்கு ஏற்ற குணங்களுடன் சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கி வந்தார். 


அரசியலில் நுழைந்த சில காலங்களிலேயே எதிர்க்கட்சி என்ற அளவிற்கு வளர்ந்தார்.  அவரது உடல்நிலை மோசமானதால் அப்படியே வீட்டில் முடங்கினார், இப்போது அவர் நம்மைவிட்டு மொத்தமாக பிரிந்துவிட்டார். நிலையில் அரசியலில் விஜயகாந்த் விட்ட இடத்தில் இருந்து அவரது மகன்  சாதிப்பார் என தெரிகிறது. 


தேர்தலில் போட்டியிட போகும் விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயகாந் மகனின் சொத்து விவரத்தை வேட்புமனு தாக்கலில் பதிவு செய்துள்ளார். அதில் விஜயபிரபாகரனுக்கு ரூ 11.38 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ 6.57 கோடி அசையா சொத்துகளும் உள்ளதாக பதிவு செய்துள்ளார். இந்த தகவல் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement