• Jan 19 2025

ஜெனி கொடுத்த தரமான பதிலடி.. மிரண்டு போன ஜோசேப்! பாக்கியாவுக்கு கிடைத்த நல்ல செய்தி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஜோசேப் பாக்கியாவை பார்த்து உங்களுக்கு அவ்ளோத் தான் மரியாதை வீட்டை விட்டு வெளியே போங்க என விரட்ட, மரியமும் போகுமாறு கண்ணை காட்டுகிறார். இதனால் பாக்கியா கிளம்புகிறார்.

அதன் பின்ஜெனியின் ரூம் கதவை மரியம் திறந்து விட, பாக்கியாவிடம் பேச வெளியே வர ஜோசப் தடுத்து நிறுத்துகிறார். ஆனாலும், செழியன் எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணலாம் அவ்வளவு தானா என கேட்டு ஜெனி கத்துகிறார்.

அதற்கு ஜோசேப், அவன் கல்யாணம் பண்ணின பண்ணிட்டு போகட்டும். உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் போறேன் என  சொல்ல, இன்னொரு கல்யாணத்தை பத்தி பேசாதீங்க டாடி என பதிலடி கொடுக்கிறார் ஜெனி. பிறகு மரியத்திடம் செழியன் எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணலாம் என அழுது துடிக்கிறார். 


வீட்டுக்கு வந்த பாக்கியா, ஈஸ்வரியிடம் சாப்பிட்டீர்களா என்று கேட்க, நீ பண்ண வேலைக்கு எனக்கு பசி இல்லாம போச்சு அவ்வளவு நிறைவா இருக்கு எனக்கு என கோபப்படுகிறார். அதன் பின் ஈஸ்வரி உள்ளே எழுந்து செல்ல, ராமமூர்த்தியிடம் பேசிய விஷயத்துக்காக மன்னிப்பு கேட்கிறார் பாக்கியா. அவரும் பாக்கியாவை புரிந்துகொண்டு செழியன் விஷயத்துல உனக்கு என்ன தோணுதோ அதை செய் என்று கூறுகிறார்.

இதை தொடர்ந்து எழில், அமிர்தாவிடம் ஜெனி வீட்டுக்கு போன விஷயத்தையும் அங்கு நடந்ததையும் பற்றிய பேசிக் கொண்டு இருக்க, மரியம் போன் பண்ணுகிறார். அதன் போது செழியனுக்கு கல்யாணம் என்று தெரிந்ததும் ஜெனி கோபப்பட்டது பற்றி கூறுகிறார். மேலும் இனி அவங்க ரெண்டு பேரும் சந்திச்சு பேசுறது தான் சரியா இருக்கும். அது உடனே நடக்கணும் நான் ஏற்பாடு பண்றேன் என மரியம் சொல்ல, பாக்கியா சந்தோசப்படுகிறார்.

அடுத்த நாள் காலையில் லொகேஷன் அனுப்பி வைக்க, பாக்கியா எழில் உட்பட இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் ஜெனியை பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவெடுக்கிறார். அதன்படி மூவருமே வெளியே கிளம்புகிறார்கள்.

இதன்போது அங்கிருந்த ஈஸ்வரி, கோபி, ராமமூர்த்தி இவர்களைப் பார்த்து எங்கே போறீங்க எனக் கேட்க ஆளுக்கு ஒரு பதிலாக சொல்லி சிக்கிக் கொள்கிறார்கள். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement