• May 03 2024

வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் -ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘வாரிசு’. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா.சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.ஏற்கனவே பலர் நடித்து வரும் இந்த படத்தில் லேட்டஸ்டாக எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க விஜய் தான் டைரக்டர் வம்சியிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

அத்தோடு வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது முதல்முறையாக அப்படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி இப்படத்தில் “விஜய் ராஜேந்திரன்” என்ற பெயரில் அப்ளிகேஷன் டிசைனராக நடிக்கிறார் தளபதி விஜய்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement