• Jan 18 2025

நடிகை மந்த்ரா உண்மையில் யார் தெரியுமா.. இவரின் கணவரும் ஒரு சினிமாப் பிரபலமா.. இதோ பலருக்கும் தெரிந்திடாத தகவல்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

குறிப்பாக 90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பல திரைப்படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் நடிகை மந்த்ரா. 


இவர் ஜூன் 29-1980 இல் பிறந்தார். இவரின் தற்போதைய வயது 42. இவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வெஸ்ற் கோதாவரியில் பிறந்தார். இவர் தெலுங்கை சார்ந்தவர் என்பதனால் முதலில் அறிமுகமானது குழந்தை நட்சத்திரமாக ஒரு தெலுங்குப் படத்தில் தான். அந்தவகையில் இவர் 6வயதிலேயே நடிப்புத் துறையில் கால் பதித்து இருக்கின்றார்.


பின்னர் வளர்ந்ததும் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் தான் ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமானார். தெலுங்கு மட்டுமன்றி ஹிந்தி, மலையாளம், கன்னட எனப் பல மொழிகளிலும் நடித்து வந்தார்.


மேலும் தமிழில் 'பிரியம்' என்ற திரைப்படம் மூலமாக 1996 ஆம் ஆண்டு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பின்னர் விஜய்யுடன் இணைந்து 'லவ் டுடே', அஜித்துடன் இணைத்து 'ரெட்டை வயசு', பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, கொண்டாட்டம்" உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருந்தார்.


இவ்வாறு பல படங்களில் நடித்திருந்தாலும் இவரால் தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வர முடியவில்லை. இருப்பினும் தெலுங்கில் பல படங்களில் பல விருதுகளை வென்றிருக்கின்றார். ஹோம்லி கேர்ளாக நடித்து வந்த இவர் ஓர் கட்டத்தின் பின்னர் கிளாமர் கேர்ள் ஆகவும் நடிக்கத் தொடங்கினார்.


பெரிதாக பட வாய்ப்புக்கள் அமையாததால் 2005 ஆம் ஆண்டு திருமணமாகி செட்டி ஆகினார். அதாவது பிரபல இயக்குநரான ஸ்ரீமுனி என்பவரைத் தான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தையடுத்து 2013 இல் இருந்து மறுபடியும் படங்களில் நடித்து வருகின்றார். அதுமட்டுமல்லாது தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.

இவரின் உண்மையான பெயர் ராசி என்பது தான். ஆனால் ஒரு சில படங்களில் விஜயா என்றும், தமிழில் மந்த்ரா என்றும் இவரது பெயரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement