• Jan 19 2025

BMW பைக்கில் ஒரு ரைடு! நைட்டில் ஊரை சுற்றும் நடிகை மஞ்சு வாரியர்! வைரல் வீடியோ இதோ!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

கேரள மாநிலம் கொச்சியில் நடிகை மஞ்சு வாரியர் தனது BMW பைக்கில் வலம் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர். 


நடிகர் அஜித்குமாருடன் துணிவு படத்தில் நடித்த போது, அவருடன் லடாக்கிற்கு பயணம் செய்த மஞ்சுவாரியர், பின்னர் பைக் ஓட்ட கற்றுக்கொண்டு, ஓட்டுநர் உரிமம் பெற்றார். அதன் பிறகு பல இடங்களுக்கு பைக்கில் ட்ரவல் செய்து வருகிறார்.  


இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் BMW GS 1250 என்ற பைக்கை வாங்கிய ம​ஞ்சு வாரியர், கொச்சியில் ஜாலியாக உலா வரும் காட்சியை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...


Advertisement

Advertisement