தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் fதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் மனிஷா யாதவ். இதனை அடுத்து தெலுங்கில் படவாய்ப்புக்கள் குவிந்ததால் ராஜு தயாரித்த டுனேகா டுனேகா என்கிற படத்தில் நடித்தார்.
பின்னர் மீண்டும் சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்தார். இப்படத்தில் மிகவும் அழுத்தமான வேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து ஜி.வி பிரகாஜ் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லேனா நயன்தாரா படத்தில் நடித்தார்.
தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு, தான் இயக்கிய சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்கிற பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆட வைத்தார். இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதால், இவரை ரசிகர்கள் சொப்பன சுந்தரி என்றே செல்லமாக அழைக்கத் தொடங்கினார்.
இவ்வாறு தொடர்ந்து பல்வேறு விதமான வேடங்களில் நடித்தாலும், இவருக்கென எதிர்பார்த்த அங்கீகாரம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. தற்போது இவர் கைவசமும் ஒரு படம் கூட இல்லை. சமீபத்தில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்குள்ள கடற்கரையில் எடுத்த பிகினி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
Listen News!