• Sep 21 2024

மீண்டும் இணையும் ‘டான்’ கூட்டணி.. பிரியங்கா மோகனை மட்டும் கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைய இருக்கும் நிலையில் நாயகி மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான ‘டான்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி உள்பட பலர் நடித்திருந்தனர் என்பதும் அனிருத் இசையமைத்து இருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி இணையும் படம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ’டான்’ படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் என்பதும்  சமுத்திரகனி உட்பட இன்னும் சில நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் ’டான்’ படத்திற்கு இசையமைத்த அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் ’டான்’ படத்தில் பணி செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் அப்படியே இந்த படத்தில் பணி செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ’அமரன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே 23’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சிபி சக்கரவர்த்தி படத்தில் இணைவார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement