• Jan 19 2025

ஈஸ்வரிக்காக பாக்கியா எடுத்த முடிவு.. குடி குடியென குடித்து கேவலப்படும் கோபி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின்  இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி அழுது கொண்டே இருக்க அவரை கும்பகோணம் அழைத்துப் போவதற்கு பாக்கியா முடிவு செய்கிறார்.

இதற்காக ராமமூர்த்தியிடம் கதைத்து விட்டு வீட்டார்களிடமும்  முடிவை சொல்லுகிறார். மேலும் செல்வியையும் ஜெனியையும் வீட்டை பார்த்துக் கொள்ளுமாறும் அமிர்தாவை ரெஸ்டாரண்டை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லுகிறார்.

கும்பகோணம் போவதற்கு இனியாவையும் அழைக்க முதலில் அவர் மறுக்கின்றார். பிறகு பாக்கியா கட்டாயப்படுத்த அவரும் வருவதாக சொல்கின்றார்.


மறுபக்கம் கோபி கிச்சனில் வேலை செய்பவர்களிடம் கோபத்தில் பேசுகிறார். அதுமட்டுமின்றி பார்க்கு சென்று குடி குடியென குடிக்கின்றார்.

அவரது நண்பர் அங்கு வந்த பிறகு, தான் ராதிகாவை கட்ட முதல் சிங்கம் போல இருந்ததாகவும் இப்போ அசிங்கமா கேவலமா இருப்பதாகவும் புலம்புகிறார். இதை தொடர்ந்து அளவுக்கு மீறி குடித்து விட்டு வீட்டுக்குச் செல்ல, அங்கு வாசலில் வைத்து ஈஸ்வரியை வெளியே அனுப்பியதை பற்றி நினைத்து வருந்துகிறார்.

ராதிகாவின் வீட்டுக்குச் சென்று கதவை தட்ட கமலா சென்று கதவை திறக்கின்றார். வாசலில் அவர் குடித்துக்கொண்டு வந்ததை பார்த்த கமலா முகத்தை சுளித்துக்கொண்டு உள்ளே செல்ல, ராதிகாவும் கோபியை பார்த்து கடும் கோபத்தில் இருக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement