• May 19 2024

கடற்கரையில் விளையாடும் நடிகை அசினின் மகள்..லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடற்கரை மணலில் தனது மகள் விளையாடும் புகைப்படங்களை நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிவந்தவர் நடிகை அசின் . 2001ல் ‘நரேந்திரன் மக்கள் ஜெயகாந்தன் வக்கா’ என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகை அசின் சினிமாத்துறைக்குள் வந்தார்.

தெலுங்கு சினிமாவில் தனது சினிமா பயணத்தை தொடங்கி தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் நடிகை அசின்.நடிகை அசின் தமிழ் சினிமாவில் M. குமரன் சன் ஒப் மகாலக்ஷ்மி திரைப்படத்தின் மூலம் தனக்கான அங்கீகாரத்தை பற்றவர்.

விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களிலும் நடித்திருந்தார். இதையடுத்து இவர் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு, நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தார்.அசினுக்கு ஆரி என்ற பெண் குழந்தை 2017ம் ஆண்டு பிறந்தது.

சினிமாவில் நடிக்காமல் இருக்கும் அசின் சமூக வலைத்தளங்களில் எப்போதாவது ஒரிரு பதிவுகளை பதிவிடுவார்.சமீபத்தில் நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் அரினின் 5-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளின் புகைப்படத்தை பகிர்ந்து மகளை வாழ்த்தி இருந்தார். 



இவ்வாறுஇருக்கையில்  தனது மகள் அரின் கடற்கரை மணலில் தனது தோழிகளுடன் விளையாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.



Advertisement

Advertisement