• May 19 2024

கவர்ச்சி உடையில் உற்சாகக் குளியல் போடும் நடிகை அமலாபால்- வைரலாகும் வீடியோ

stella / 7 months ago

Advertisement

Listen News!


சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆனவர் அமலா பால். அந்த படம் சர்ச்சையான நிலையில், அடுத்ததாக வந்த மைனா படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான மைனா திரைப்படம் அமலாபாலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. 

மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக வந்த அமலா பால் யார் என்று எல்லோரும் தேடினார்கள். அதன்பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன. முன்னணி நடிகையாக தமிழில் மாறினார். விக்ரம் உடன் தெய்வத்திருமகள், விஜய் உடன் தலைவா ஆகிய படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் அமலபால் தான் ஹீரோயினாக இருந்தார். 


இதனிடையே தெய்வத்திருமகள் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்ததோடு தற்பொழுது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது கவர்ச்சி உடையில் உற்சாகக் குளியல் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement