• May 20 2024

லீவு நாட்களில் மதுரைக்கு இயக்குநர் பாலாவுடன் போவாராம் நடிகர் விக்ரம்- ஹாலிடே ரகசியம் இது தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகவுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இப்படத்தில் கதாநாயகனாக விக்ரமும் கதாநாயகியாக கே ஜி எப் திரைப்பட நடிகை ஸ்ரீ நிதியும் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது. படப்பிடிப்புக்கள் யாவும் நிறைவுற்ற நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று அமெரிக்கன் கல்லூரியில் படக்குழு ரசிகர்களை சந்தித்தனர்


அந்த வகையில் இந்த நிகழ்வில் பேசிய விக்ரம் மதுரை வந்தாலே மீசை தானாகவே முறுக்குகிறது உங்கள் அன்பு தான் காரணம். இங்கு நீங்கள் தரும் பிரமிப்பு தருகிறது. அஜய் ஞானமுத்து உங்கள் ஊர்க்காரர் அவர் இயக்கியுள்ள படம் படவேலைகளால் அவரால் வர முடியவில்லை. இந்த கல்லூரியில் தான் என் தந்தை படித்தார். மதுரையில் தான் நான் ஹாலிடே கொண்டாடுவேன். என் நண்பர்கள் பாலா அமீர் எல்லாம் இங்கு தான் இருந்துள்ளார்கள்.

அமீர் மதுரையில் இருந்து ஸ்பெஷலாக உணவுகள் கொண்டு வருவார். இன்று மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா சாப்பிட்டேன். கோப்ராவிற்கு வருவோம். கோப்ரா படம் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது. எமோஷன் காமெடி ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும்.எனக்கு படம் மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் பிடிக்கும். படத்தை எல்லோரும் தியேட்டரில் பாருங்கள் நன்றி என்று கூறியுள்ளார்..


Advertisement

Advertisement