• May 21 2024

நடிகர் திலகம் சிவாஜியை தேசிய விருது வாங்காமல் தடுத்த கமல் ...நடந்த சம்பவம் என்ன?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

1954 ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் தேசிய விருது  வருடந்தோறும் பல தலைசிறந்த கலைஞர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் 270க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நடிப்புக்காகவே வாழ்க்கையில் வாழ்ந்து, மறைந்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 

இவரது நடிப்பை பாராட்டி செவாலியர் விருது, இன்டர்நேஷனல் விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன், பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிக் குவித்தவர்.ஆனால் இவரது வாழ்க்கையில் வாங்காத ஒரே விருது தான் தேசிய விருது. ஏன் சிவாஜியின் நடிப்புக்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை என அன்றிலிருந்து இன்று வரை பலரது கேள்வியாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கோபத்தை உண்டாக்கும் விதமாகவும் உள்ளது. இந்த நிலையில் சிவாஜி கணேசன் வாங்க இருந்த தேசிய விருதை வாங்க விடாமல் பிரபல நடிகர் தடுத்துள்ளார்.

1993 ஆம் ஆண்டு இயக்குநர் பரதன் இயக்கத்தில் வெளியான தேவர் மகன் திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது .சிவாஜிகணேசன், கமலஹாசன், ரேவதி, நாசர் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்காக சிறந்த படம், சிறந்த துணை நடிகை, சிறந்த பாடகி, சிறந்த சத்தம், சிறந்த துணை நடிகர் என மொத்தம் 5 விருதுகள் இப்படத்திற்காக கிடைக்கப் பெற்றது. அதில் சிவாஜி கணேசனுக்கு கொடுக்கப்பட்ட சிறந்த துணை நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி விருதை அவர் வாங்ககூடாது என கமலஹாசன் மறுத்துள்ளார்.

அந்த சமயத்தில் சிவாஜி கணேசன் தேசிய விருதை வாங்க ஆவலுடன் இருந்துள்ளார். அப்போது கமலஹாசன் நீங்கள் இந்த விருதை வாங்க வேண்டாம் எனகூறி சிவாஜிகணேசனை தடுத்துள்ளார். உடனே சிவாஜி கணேசனும் ஏன் வாங்கக்கூடாது, நான் விருது வாங்க செல்லப் போக உள்ளதால் ஆடைகளை தைக்க கொடுத்துவிட்டேன் என்று கூறினாராம். ஆனால் கமல்ஹாசன், உங்களுக்கு துணை நடிகர் விருதெல்லாம் வேண்டாம், தாதா சாஹேப் பால்கே என்ற தேசிய விருதை காட்டிலும் உயரிய விருது உள்ளது, அதை வாங்கிக்கலாம் என கூறினாராம்.

சிவாஜி கணேசனும் தனக்கு கொடுக்கப்பட்ட தேசிய விருதை கமலஹாசன் சொன்ன காரணத்தால் நிராகரித்து விட்டார். எப்படிப்பட்ட நடிகருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதா கொடுப்பது, உங்கள் விருதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என கமலஹாசன் அன்றைக்கு கூறியதாக அண்மையில் நடந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த நிகழ்வு நடந்த மூன்றே ஆண்டுகளில் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தாதா சாஹேப் பால்கே விருதை சிவாஜி கணேசன் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement