• Apr 28 2024

நடிகர் சிம்புவின் பிறந்தநாள் இன்று : சூப்பர் ஹிட் பரிசு கொடுத்த படக்குழு .! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலம்  அற்புதமான கம்பேக் ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்துள்ளது. அவரது 40-வது பிறந்தநாள் இன்று, திரையுலகில் இயக்கம், நடிப்பு, இசை, நடனம், தயாரிப்பு என்று நாலாப்புறமும் கலக்கிவரும் சிம்பு மீது பல விமர்சனங்களை சிலர் அடுக்கி வந்தாலும் , வெற்றிகளின் மூலம் அவற்றை தகர்த்து எறிந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று நடிகர் சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர், நடித்துள்ள பத்து தல படத்தில் இருந்து “நம்ம சத்தம்” பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடத் துவங்கியுள்ளனர்.

விவேக் வரிகளில் ஏஆர் ரஹ்மான் இசையில், அவரும் யோகி சேகரும் பாடியுள்ளனர். சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்த பாடலை கேட்கும் போதே, இந்த படத்தில் சிம்பு ஒரு கேங் ஸ்டாராக நடித்திருப்பது போல் தெரிகிறது. ஒபேலி என் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தில், சிம்பு தவிர கவுதம் கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இது கன்னட பிளாக்பஸ்டர் ‘மஃப்தி’யின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும், கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement