• Sep 19 2024

பதான் படத்திற்கு வரும் எதிர்ப்புகளுக்கு பதிலடி கொடுத்த நடிகர் ஷாருக்கான்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சாருக் கான் பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார்.


மேலும் இவர் 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். 


இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள "பதான்" 2023 -ஆம் ஆண்டு ஜனவரி 25 வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.


இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். இப்படத்தின் வீடியோ பாடலில் தீபிகா காவி நிறத்தில் பிகினி அணிந்து கொண்டு கவர்ச்சியாக நடனம் ஆடியிருப்பார். இதனால் பல இந்து அமைப்புகள் பதான் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது சிலர் ஷாருக்கானுக்கு எதிர்மறையான பரப்புரைகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதில் அளித்த ஷாருக்கான், "சமூக வலைத்தளங்கில் எனக்கு எதிராக வரும் கருத்துக்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement