• May 19 2024

கறுப்பு நிற உடையணிந்து... கோலாகலமாக ஐயப்பன் பூஜையை கொண்டாடும் மஹத்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மஹத் ராகவேந்திரா.இவர் 2006-ஆம் ஆண்டு சிம்பு நடித்த 'வல்லவன்', 2007-ஆம் ஆண்டு வெளிவந்த 'காளை' ஆகிய திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். 


இதனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு படமான 'மங்காத்தா' திரைப்படத்தில் நடித்தார். பின்பு 2014-ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் விஜய் நடித்த 'ஜில்லா' திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறாக படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மஹத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹீரோவாகவும் தனது பயணத்தைத் தொடங்கி விட்டார்.


இந்நிலையில் இவர் தற்போது ஐயப்பன் பூஜை ஒன்றினை மேற்கொண்டிருக்கின்றார். அதனைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அதனை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement