• May 18 2024

தளபதி 66 படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார்- செம குஷியான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்களி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் இவர் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 படத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று மீண்டும் தொடங்க உள்ளது. இன்றைய படப்பிடிப்புக்காக விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார் என்பதும் தமன் இசையமைத்து வருகிறார் . இப்போது படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு வரும் நடிகர் சரத்குமார் “நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு மற்றும் கால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நான் மீண்டும் ஜிம்முக்கு வருகிறேன். தளபதி 66 படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில்” எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement