• May 19 2024

ரஜினி படம் வெளியானதால்... நடிகர் ஜெய் ஆகாஷிற்கு நேர்ந்த சோகம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் ஓஹோவென கொடி கட்டிப் பறந்த நடிகர் ஜெய் ஆகாஷ் தற்போது சின்னத்திரையிலும் கலக்கி வருகின்றார். மேலும் 2001ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஆனந்தம்' திரைப்படம் பிளாக் பஸ்டர் திரைப்படம் இவரின் வாழ்க்கையின் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. இதனையடுத்து தெலுங்கில் பல பட வாய்ப்புக்கள் குவிந்தன.


இருப்பினும் இவருக்கு பெரிய அளவில் தமிழ் திரையுலகில் வரவேற்பு கிடைக்கவில்லை. அந்தவகையில் ரோஜாவனம், ரோஜாக் கூட்டம், இனிது இனிது காதல் இனிது போன்ற பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ஜெய் ஆகாஷ் அடுத்ததாக ‘எக்ஸ் ஆர்மி மேன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப் படத்தின் உடைய பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இப்படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெய் ஆகாஷ் பல விடயங்களை பகிர்ந்துள்ளார். 


அந்தவகையில் பெரிய படம் திரைக்கு வரும்போது சின்ன படங்கள் எல்லாம் தியேட்டரில் இருந்து தூக்கி விடுகின்றமை குறித்து ஜெய் ஆகாஷ் தனது கருத்தினை முன்வைத்து இருக்கின்றார். அந்தவகையில் அவர் கூறுகையில் "எனக்கு கூட அப்படி ஒரு நிலைமை நடந்துருக்கு. அதாவது நான் ஹீரோவாக நடித்த 'குருதேவா’ படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது, அந்த படத்திற்கு சிறந்த வரவேற்பும், பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்தன.


இவ்வாறாக அந்தப் படம் தியேட்டரில் நன்றாக போய்கொண்டிருந்தபோது ரஜினி நடித்த சந்திரமுகி படம் வெளியானது. இதனால் மற்ற படங்களை எல்லாம் தூக்கினார்கள். அவ்வாறு தூக்கப்பட்ட படங்களில் என் படமும் ஒன்று" என்றார்.

மேலும் "இது எதுவுமே எங்களுடைய கையில் இல்லை. ரஜினிக்கென்று ஒரு மாஸ் பட்டாளமே உள்ளது. எங்கள் படத்தை விட அவர் படத்தை தான் ரசிகர்கள் அதிகம் பார்க்க விரும்புவார்கள். இப்பகூட ஜெயிலர் படம் நிறைய தியேட்டர்களில் வெளியாகியும் பலருக்கு டிக்கெட் கிடைக்காமல் இருக்குது. 

அதனால் தலைவர் சூப்பர் ஸ்டார் வருகிறார் என்றால் நாங்கள் அனைவரும் ஒதுங்கி வழிவிட்டு தான் ஆக வேண்டும். ரஜினி படத்தோடு எங்கள் படம் போட்டி போடா முடியாது" எனவும் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெய் ஆகாஷ்.

Advertisement

Advertisement